அபிராமி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா!
ADDED :4907 days ago
கிள்ளை : பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 6ம் தேதி நடக்கிறது. சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 2ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 3 மற்றும் 4ம் தேதிகளில் மங்கள இசை நிகழ்ச்சியுடன் சிறப்பு பூஜையும், 5ம் தேதி காலை 10 மணிக்கு காவடி உற்சவமும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 6ம் தேதி அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழா இடும்பன் பூஜை மற்றும் காப்பு களைதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை சின்னசாமி குடும் பத்தினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.