ஆண்டிபட்டியில் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் தயார்
ADDED :2263 days ago
ஆண்டிபட்டி : விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இந்து முன்னணி சார்பில் ஆண்டிபட்டியில் விநாயகர் சிலைகள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. செப். 2-ல் விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து செப். 3ல் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலத் திற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடந்து வருகிறது.
வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல வண்ணம் கொண்ட விநாயகர் சிலைகள் சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன.