வேடசந்தூரில் முத்தாலம்மன், பாலாலயம்
ADDED :2255 days ago
வேடசந்துார் : கோவிலுார் ஊராட்சி ராமநாதபுரத்தில், விநாயகர், முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன.இக்கோயில்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து ஊர் நாயக்கர், நாட்டாமை மற்றும் பொது மக்கள் முன்னிலையில், சிவாச்சார் யார்கள் பங்கேற்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோயிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டு, நீர் நிறைந்த தொட்டியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.