உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோட்டில் வேம்பு அரசமரத்தடியில் அமைந்துள்ள  ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம்  கால யாக சாலைபூஜை, தத்துவார்ச்சனை நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி,  9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வரும் 2ம்  தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, சந்திரசேகர  சிவாச்சாரியார், நடராஜ குருக்கள் மற்றும் அப்பகுதி மக்கள்  செய்திருந்தனர்.

* கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜா நகர் பெரிய ஏரிக்கரையில் உள்ள விநாயகர், பால முருகன், சூரியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி, லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 7:00 மணிக்கு வேதிகா  அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாகுதி, யாத்ரா தானம், மகா தீபாராதனை  காண்பித்தனர். 8:30 மணிக்கு சூரியப்பன் விமானத்திலும், 9:30 மணிக்கு  விநாயகர், பாலமுருகன், சூரியப்பன் மூலஸ் தானத்திலும் புனித நீரூற்றி  கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.செஞ்சிநெகனுார் பட்டி செல்வவிநாயகர்  கோவிலில் கடந்த 24ம் தேதி காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,  கடங்கள் யாக சாலை எழுந்தருளுதல், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை,  நடந்தது. 9:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று  முன்தினம் 25ம் தேதி காலை சிறப்பு வேள்வி பூஜையும் யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி,  9:30 மணிக்கு விமான மகா கும்பாபிஷகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !