அவலுார்பேட்டையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி..
ADDED :2244 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.அவலுார்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வேணு கோபால் சுவாமி பஜனை கூடத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் 26ம் தேதி இரவு தெருக்களில் உறியடித்தலும் கடை வீதியில் வழுக்கு மரம் ஏறும் சிறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.சுவாமி சிறப்பு அலங்காரத்தில், கோலாட்டம் மற்றும் பஜனையுடன் வீதியுலா நடந்தது.