திருக்கோவிலுார் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கூட்டம்
ADDED :2338 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதியைச் சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, பாண்டியன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., மகேஷ் தலைமை தாங்கி, விநாயகர் சிலை அமைப்பதற்கான விதிமுறைகள் குறித்தும், பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார்.
கூட்டத்தில், திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் காவல் உட்கோட்டங்களைச் சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.