உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமான் பின்தங்கிய ஜாதி: அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிவபெருமான் பின்தங்கிய ஜாதி: அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாட்னா: ’கடவுள் சிவபெருமான் பின்தங்கிய பிந்த் ஜாதியை சேர்ந்தவர்’ என பீகார் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் கவர்னர் பாகு சவுகானை கவுரவிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நடந்தது. இதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர் பிரிஜ் கிஷோர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பிரிஜ் கிஷோர் பேசுகையில், கடவுள் சிவபெரு மான், சமூகம், கல்வியில் பின்தங்கிய பிந்த் ஜாதியை சேர்ந்தவர் எனக் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

நிகழ்ச்சிக்கு பின் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர், வரலாற்று நிபுணர் வித்யாதர் மகாஜன் எழுதிய சிவபுராணத்தில் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி பேசியதாக தெரிவித் தார். மேலும், ராமர் சத்திரிய குலம், கிருஷ்ணர் யாதவர் குலம் என கூறும் போது, சிவன் பிந்த் ஜாதி என கூறுகையில் மட்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியம் அளிக்கிறது எனக் கூறினார்.

முன்னதாக, கடவுள் அனுமன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !