உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலைச்சேரிபட்டி பெரியநாயகி அம்மன், புரவி எடுப்பு திருவிழா

வலைச்சேரிபட்டி பெரியநாயகி அம்மன், புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி : வலைச்சேரிபட்டி பெரியநாயகி அம்மன், இடைமலை மற்றும் வல்லக்குடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. பக்தர்கள் ஆக.,13 முதல் காப்புகட்டி விரதமிருந்தனர். 3 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று 28ல் கோயில் வீட்டில் இருந்து சாமி சிலைகள், புரவிகள் மந்தைக்கு கொண்டு வரப் பட்டு சாமியாட்டம் நடந்தது.

இன்று (ஆக.,28) மந்தையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் தனித்தனியாக இரண்டு இடத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை (ஆக., 30ல்) எருதுகட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !