உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை, ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில்  இருந்து, கேரளா மாநிலம், கொச்சுவேலி மற்றும் எர்ணாகுளத்துக்கு, சுவிதா மற்றும்  சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, செப்., 9, இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில், மறுநாள் பகல், 1:15க்கு, கேரளா மாநிலம், கொச்சுவேலி சென்றடையும்

கொச்சுவேலியில் இருந்து, செப்., 10, மாலை, 6:05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 11:20க்கு, சென்னை சென்ட்ரல் வந்துஅடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, செப்., 11 இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள், காலை, 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும் எர்ணாகுளத்தில் இருந்து, செப்.,  12, மாலை, 5:15க்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 5:30  மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில்  இருந்து, செப்., 10, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள்  காலை, 9:05க்கு, கொச்சுவேலி சென்று அடையும்கொச்சுவேலியில் இருந்து,  செப்.,11, நண்பகல், 12:40க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள், அதிகாலை,  5:25 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயில்களுக்கான  முன்பதிவு, இன்று 30ல் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !