புதுப்பேட்டையில் ஜாத்திரை நிறைவு
நகரி: புதுப்பேட்டை கிராமத்தில், நேற்றுடன், ஆண்டு ஜாத்திரை நிறைவடைந்தது.சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி பகுதியில் உள்ள, புதுப்பேட்டை கிராமத்தில், ஆண்டு ஜாத்திரை, கடந்த, 26ம் தேதி துவங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் ஜாத்திரையின், முதல் நாளில், கிராமத்தினர் கிராம தேவதை யான, ஓர்குண்டாலம்மன், டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் ஆகிய கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இரண்டாம் நாளில், இரவு, கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். மேலும், உற்சவர் சிவகங்கையம்மன் வீதியுலாவும் நடந்தது.
மூன்றாம் நாளான, நேற்றுமுன்தினம் (ஆக., 28ல்) அதிகாலை, கங்கையம்மன், புதுப்பேட்டை யில் எழுந்தருளினார். மாலையில், பூகரகம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 29ல், ஜாத்திரை நிறைவு நாளில், உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜாத்திரையையொட்டி, நான்கு நாட்களும், இரவில் நாடகம், பாட்டு கச்சேரி மற்றும் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.