உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை; கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசை; கோவில்களில் சிறப்பு வழிபாடு

பந்தலூர்: பந்தலூர் முருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


பந்தலூர் முருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அத்துடன் சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, அமாவாசை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !