உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

திருப்புவனம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான இந்துக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.


ஒரே நேர்கோட்டில் வரும் நாள் அமாவாசை எனப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் தட்சிணாய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது . மறைந்த தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் திதி, தர்ப்பணம் வழங்கி வழிபடுவது வழக்கம். இன்று ஆடி அமாவாசை என்பதால் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திதி, தர்பணம் வழங்கியதுடன் புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு சென்றனர். மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்துக்கள் ஏராளமானோர் நேற்று வைகையாற்றில் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இதனால் வைகை ஆற்று பாலத்தின் இரு பகுதிகளிலும் டூவீலர், கார் ஆகியவற்றை பார்க்கிங்காக மாற்றி விட்டனர். நெரிசலில் அசம்பாவிதத்தை தவிர்க்க மானாமதுரையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !