விநாயகர் சிலை ஊர்வல வழித்தடம்: புளியம்பட்டி, சத்தியில் எஸ்.பி.,ஆய்வு
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவுள்ள வழித்தடத்தில், எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி நகரம் மற்றும் பவானிசாகர் ஒன்றிய கிராம பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப் படவுள்ளன. செப்.,6ம் தேதி மாலை, அனைத்து விநாயகர் சிலைகளும் டானாபுதூரில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பகுடுதுறை-பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கவுள்ள டானாபுதூர், முத்துமாரியம்மன் கோவில், நால்ரோடு சோதனைச்சாவடி, கோவை சாலை,பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட வழித்தடத் தில் எஸ்.பி., சக்தி கணேசன் நேற்று 30ல், ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்,
* சத்தியமங்கலம் தாலுகாவில், தாளவாடி, புளியம்பட்டி, பவானிசாகர், சத்தி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 75 விநாயகர் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. ரங்கசமுத்திரம், பஸ் ஸ்டாண்ட், ஆற்றுப்பாலம், சின்னகோட்டு வீராம்பாளையம், பழைய மார்க்கெட் வீதி, வரதம் பாளையம், வடக்குப்பேட்டை வழியாக எடுத்து செல்லப்பட்டு, பவானி ஆற்றில் கரைப்பது வழக்கம். ஊர்வலப்பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, எஸ்.பி., சக்தி கணேசன் நேற்று 30ல், ஆய்வு செய்தார். சத்தி டி.எஸ்.பி., சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உடனிருந்தனர்.