ஓசூரில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் ஆலோசனை கூட்டம்
ADDED :2231 days ago
ஓசூர்: ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., மீனாட்சி தலைமை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
சிலைகள் வைக்கப்படும் இடம் தனியாருக்கு சொந்தமானது என்றால், சம்பந்தப்பட்ட நபரிடம் கடிதம் பெற வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகை யில் சிலைகளை வைக்க வேண்டும் என, இந்து அமைப்புகளுக்கு போலீசார் ஆலோசனைகளை வழங்கினர்.