மகுடஞ்சாவடியில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2229 days ago
மகுடஞ்சாவடி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, தப்பக்குட்டை, பழையூர், முத்துக்குட்டியூர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 26ல், முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று 30ல், காலை, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்று, திரளான பக்தர்கள் நீராடினர்.
அங்குள்ள குளத்தில், தண்ணீர் எடுத்து, மண்டபத்தில், தீர்த்தக்குடங்களை வைத்து, தரிசனம் செய்தனர். பின், பம்பை,வாத்தியம் முழங்க, பட்டாசு வெடித்தபடி, ஊர்வலமாக சென்று, சக்தி விநாயகர் கோவிலை அடைந்தனர். இன்று 31ல், காலை, 6:00 மணிக்கு, முதல்கால யாகபூஜை, நாளை (செப்., 1ல்) காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. அதைத்தொடர் ந்து, சக்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கும்.