உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணார்பேட்டையில் இசக்கி அம்மன் கோயில் கொடை விழா!

வண்ணார்பேட்டையில் இசக்கி அம்மன் கோயில் கொடை விழா!

திருநெல்வேலி : வண்ணார்பேட்டை தேவி இசக்கி அம்மன் கோயில் 23வது கொடை விழா பாளை., யில் வரும் 6ம் தேதி நடக்கிறது. ஏப்.5ம் தேதி கொடை விழாவை பாளை., வீரமணி சுவாமிகள் துவக்கிவைக்கிறார். 7 மணிக்கு கொடியழைப்பு நடக்கிறது. 6ம் தேதி காலை 9 மணிக்கு அம்மன் விக்ரகம் சக்தி நிறுத்துதல், மதியம் 12 மணிக்கு மயானத்தில் கிணற்றில் இருந்து அம்மனை அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு பெண்கள் பொங்கல் இடுதல் நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு சாம கொடை, மேளம், வில்லிசை, மகுடம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுடலைமாடசுவாமி தேவி இசக்கிஅம்மன் கோயில் பரம்பரை அக்தார் இளந்தேவர் சந்திரசேகர் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !