எல்லாம் கடவுள் மயம்
ADDED :2409 days ago
பால கணபதி ஒருமுறை பூனையுடன் விளையாடினார். அப்போது அதன் முகத்தில் காயம் ஏற்பட்டது. விளையாட்டுக் கவனத்தில் விநாயகருக்கு தெரியவில்லை. பின்னர், தன் தாய் உமையவளிடம் சென்று அமர்ந்தார். தாயின் முகத்தில் சிறுகீறல் இருப்பது கண்டு, “அம்மா! என்ன காயம்!” என்றார். “அதுவா! நீ தானப்பா காரணம்!” என்றாள் அம்பிகை. விநாயகர், ”நான் ஒன்றும் செய்யவில்லையே” என்றார். “நீ பூனையிடம் விளையாடும் போது நகக்கீறல் பட்டுக் காயம் உண்டானது” என்றாள். விநாயகருக்குத் தேவி சொல்லிய இந்த அறிவுரை உயிர்கள் அனைத்தும் கடவுளின் வடிவமே என்பதை நமக்கு உணர்த்துகிறது.