கீதை காட்டும் பாதை
ADDED :2228 days ago
ஸ்லோகம்
ப்ரஸாந்தாத்மா விகதபீர்
ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:!
மந: ஸம்யம்ய மச்சித்தோ
யுக்த ஆஸீத மத்பர:!!
யுஞ்ஜந் நேவம் ஸதாத்மாநம்
யோகீ நியத மாநஸ:!
ஸாந்திம் நிர்வாணபரமாம்
மத்ஸம்ஸ் தாமதி கச்சதி!!
நாத்யஸ்ந தஸ்து யோகோஸ்தி
ந சைகாந்த மநஸ்நத:!
ந சாதி ஸ்வப்நர ஸீலஸ்ய
ஜாக்ரதோ நைவ சார்ஜுந!!
பொருள்: பிரம்மச்சர்ய விரதமிருந்து பயம் சிறிதும் இல்லாமல் அமைதியாக வாழ்பவனே யோகி. தியானத்தின் போது விழிப்புடன் இருக்கும் இவன், மன அடக்கமுடன் என்னையே எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இவனுக்கு பேரானந்தம் கிடைக்கும். மிகுதியாக உண்பவனுக்கோ, பட்டினி கிடப்பவனுக்கோ, அதிக நேரம் தூங்குபவனுக்கோ, எந்நேரமும் விழித்திருப்பவனுக்கோ யோகநிலை கைகூடுவதில்லை.