முதலில் விநாயகர் ஸ்லோகம்!
ADDED :2229 days ago
விநாயகரை பூஜித்த பின்னரே ஹோமம் செய்ய வேண்டும். செய்யும் செயலில் விக்னம்(தடை) ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்குகிறோம். மனிதர்களுக்குத் தான் தடை ஏற்படும் என்பதில்லை. தெய்வங்களுக்கும் தடை ஏற்படலாம். அதற்காகவும் விநாயகர் பூஜை செய்வது அவசியம். இதனால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் விநாயகர் ஸ்லோகம் சொன்ன பிறகே வழிபாட்டை தொடங்க வேண்டும்.