உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் சித்தகிரி தர்மசேத்ராவில் சகஸ்ர மோதக வழிபாடு

குன்னுார் சித்தகிரி தர்மசேத்ராவில் சகஸ்ர மோதக வழிபாடு

குன்னுார்:குன்னுார் எடப்பள்ளி சித்தகிரி தர்மசேத்ராவில் நடந்த, விநாயகர்  சதுர்த்தி விழாவை ஒட்டி ஆயிரம் வேதங்கள் முழங்க சகஸ்ரம் மோதகம்  வழிபாடு நடந்தது.

கோத்தகிரி எடப்பள்ளி அருகே சீரடி சாய்பாபா சித்தகிரி தர்மசேத்ராவில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டன.  தொடர்ந்து தர்மசேத்ரா அரங்கில், 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு  பூஜைகள் நடந்தன. சகஸ்ர மோதகம் வழிபாடுகள் நடத்தப்பட்டன. உணவுகள்  படைக்கப்பட்டு, கணேஷ அதர்வ சிஷ்யம் எனப்படும் வேதம் ஆயிரம் முறை  பாராயணம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மசேத்ரா  ஸ்தாபகர்கள் சக்திமயி, நந்துபாபா மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !