ஓமலூர் விநாயகர் சதுர்த்தி விழா: கதகளி நடன ஊர்வலம்
ADDED :2229 days ago
ஓமலூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில், செண்டைமேளத்துடன் கதகளி நடனம் பக்தர்களை பரவசப்படுத்தியது. ஓமலூர் கடைவீதியில், வெற்றி விநாயகர் பாய்ஸ் சார்பில், ஆறாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா நேற்று 2ம் தேதி கொண்டாடினர்.
இந்தாண்டு புதிதாக, கேரளா செண்டைமேளம் மற்றும் கதகளி நடன கலைஞர்கள் வரவழைக் கப்பட்டு, நகரில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று 2ம் தேதிமாலை விநாய கருக்கு தீபாராதனை, படையல் முடிந்து, கடைவீதி, தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டா ண்ட் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் விநாயகர் சிலை அருகே முடிந்தது. ஓமலூர் வட்ட த்தில், முதல் முறையாக கேரளா பாரம்பரிய உடையில் கதகளி நடன நிகழ்ச்சி பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.