உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2,601 விநாயகர் சிலைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை

2,601 விநாயகர் சிலைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2,601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டது.நாடு முழுவதும் நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.  

ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று கிராமம் மற்றும் நகரங்களில் மெகா  சைஸ் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து  வருகின்றனர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2ம் தேதி 2,601 விநாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகளுக்கு பொதுமக்கள் பூஜை  செய்து வழிபாடு செய்தனர். சிலைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு  பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் 3,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !