செஞ்சி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2230 days ago
செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 15ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று 2ம் தேதி நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் 1ம் தேதி மாலை திண்டிவனம் ஆஷா நாச்சியார், வேங்க டேச ராமானு ஜதாசர் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று 2ம் தேதி காலை 9:00 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு மகா சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதியும், கலச அபிஷே கம், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை, திருவாராதனம், தீபாராதனை நடந்தது.
பிரபந்த பஜனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வண்டலுார் ஓம் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.