உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 48வது பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 48ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று துவங்கியது. இதை முன்னிட்டு, காலை கொடியேற்றப்பட்டது. விழாவையொட்டி உற்சவ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலையில், திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறையும், இரவில், சுவாமி புறப்பாடும் நடக்கிறது. தினமும் இரவு சாற்றுமுறைக்கு பின் டோலோற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !