வாலாஜாபேட்டையில் 108 கணபதி ஹோமம்
ADDED :2594 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, 108 கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 108 சகஸ்ரநாம அர்ச்சனை, விநாயகர், தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம், சங்கட சதுர்த்தி ஹோமம் நடந்தது.
முரளிதர சுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.