உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மானாமதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மானாமதுரை:மானாமதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட இடங் களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தென்றல் நகர், சாஸ் தாநகர், அண்ணாமலை நகர், பெருமாள்கோயில் தெரு, ரயில்வே காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்திருந் தனர். சதுர்த்தி அன்று காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.நேற்று 3ம் தேதி காலை அனை த்து தெருக்களிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் நகரின் முக்கி ய வீதிகளின் வழியே கொண்டு வரப்பட்டு அலங்கார குளத்தில் கரைக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமை யிலான போலீசார் செய்திருந்தனர்.காரைக்குடி: காரைக்குடி, குன்றக்குடி, சாக்கோட்டை, செட்டிநாடு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 132 விநாயகர் சிலைகள் கடந்த 2ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன. காரைக்குடியில் வைக்க ப்பட்ட 76 சிலைகள் இன்று 4ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு டி.டி. நகர் விநாயகர் கோயிலில் ஒன்று கூடி அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பருப்பு ஊரணியில் கரைக்கப்பட இருக்கிறது.ஊர்வலத்தை பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைக்கிறார். வி. எச்.பி., மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால், பா.ஜ., நகர தலைவர் சந்திரன், ஆர்.எஸ்.எஸ்., தென்மாநில பொறுப்பாளர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொள் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !