உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

போடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

போடி : நகர் பகுதி, பி.தர்மத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட சிலைகள் டிராக்டரில் பஸ்ஸ்டாண்டிலிருந்து ஊர்வல மாக துவங்கி கொட்டகுடி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டது.

பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜையபாண்டியன் தலைமை வகித்தார். கீழச்சொக்கநாதர் கோயில் அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் சுப்பையா முன்னிலை வகித்து துவக்கி வைத் தனர். இந்து முன்னணி நகர தலைவர் செல்வம், பா.ஜ., நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட பொது செயலாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை, புதுார் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று வேட்டகருப்பசாமி கோயில் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் கரைக்கப் பட்டன. போடி டி.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !