உடுமலை, அருகே உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2264 days ago
உடுமலை: உடுமலை, அருகே தும்பலப்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 13ம்தேதி நடக்கிறது.
தும்பலப்பட்டியிலுள்ள, மகாமாரியம்மன் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, வரும் 10ம் தேதி துவங்குகிறது. அன்று காலையில் திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, மாலையில் தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் திருவீதி உலா நடத்துகின்றனர்.தொடர்ந்து, 11ம்தேதி, அதிகாலையில், முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், காலையில், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையும் , நடக்கிறது. 12ம்தேதி, இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடக்கிறது. வரும் 13ம்தேதி காலை, 5:45 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:55 மணிக்கு கும்பாபிேஷக விழா நடைபெறுகிறது.