உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்மலை கோயில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் நடும் விழா

பிரான்மலை கோயில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் நடும் விழா

சிங்கம்புணரி: பிரான்மலை மங்கைபாகநாத சுவாமி, திருக்கொடுங்குன்றநாத சுவாமி, வடுக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 12ல் நடக்கிறது.

அதை முன்னிட்டு நேற்று குன்றக்குடி பொன்னம்பல அடிகள் மற்றும் ஜே.சி.தனபால் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரான்மலை கும்பாபிஷேக முதல் ஸ்தானீகம் உமாபதி சிவாச்சாரியார், ஐந்து ஊர் கிராமத்தார்கள், அருவியூர் வடக்கு மற்றும் தெற்கு வளவு நகரத்தார்கள், மதகுபட்டி கிராமத்தார்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கோயில் 300 ஊர்களை ஆண்ட வேள்பாரி தலைமைபதியாக விளங்கியதும், சங்க இலக்கியத்தில் பறம்புமலை என்று போற்றப்பட்டதுமான பிரான்மலையின் அடிவாரத்தில் குன்றக்குடி ஆதினத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இக்கோயில் பாதாளம், மத்திமம், கைலாயம் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலில் சிவன் மூன்று நிலைகளில் காட்சிதருவது கோயிலின் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !