பழநியில் 108 விளக்கு பூஜை
ADDED :2260 days ago
பழநி: பழநி இந்துமுன்னணி, ஞானதண்டாயுதபாணி பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 விளக்குபூஜை, பால்குட அபிஷேக விழா நடந்தது. பழநி அடிவாரம் 31வது வார்டில் விநாயகருக்கு பூஜைகள் செய்து, 108 விளக்கு பூஜை நடந்தது. பங்கேற்றவர்களுக்கு இலவசமாக பால்குடங்கள் வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் அழகர், நகரத்தலைவர் கேசவன், பொருளாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.