திருமங்கலம் அருகே மேலக்கோட்டை முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2258 days ago
திருமங்கலம்: திருமங்கலம் அருகே மேலக்கோட்டை முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது. செப். 3 மாலை முதல்கால யாக பூஜை நடந்தது.
பின்னர் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கலச பிரதிஷ்டை நடந்தது. மறுநாள் காலை கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. செங்கப்படை ஸ்ரீநிவாசக் கண்ணன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.