கச்சிராயிருப்பில் ஊர்க்காவலன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2258 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் ஊர்க்காவலன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், இரண்டு கால யாகபூஜையை தொடர்ந்து சிவாச்சார்யார் பாலாஜி தலைமையில் நேற்று 4ம் தேதி காலை கடம் புறப்படாகி பீடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.