உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டாமுத்துார் வட்டாரத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

தொண்டாமுத்துார் வட்டாரத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், பிரதிஷ்டை  செய்யப்பட்டிருந்த, விநாய கர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு  விசர்ஜனம் செய்யப்பட்டன.

தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கடந்த 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று,  விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்றாம் நாளான நேற்று,  4ம் தேதி மாலை அனைத்து விநாயகர் சிலைகளும், மேளதாளங்களுடன், வெகு  விமர்சையாக, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நொய்யல் ஆறு, மற்றும்  குளங்களில், விசர்ஜனம் செய்யப்பட்டன.

வடவள்ளி, சுண்டப்பாளையம், சோமையம்பாளையம், வீரகேரளம் உள்ளிட்ட  பகுதிகளில், வைக்கப்பட்ட, 36 சிலைகள், நாகராஜபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.  தொண்டாமுத்துார், தேவராயபுரம், கெம்பனுார், கலிக்கநாயக்கன்பாளையம்,  தெனமநல்லுார் உள்ளிட்ட பகுதி களில் வைக்கப்பட்ட, 48 விநாயகர் சிலைகளில்,  39 சிலைகள், போளுவாம்பட்டி நொய்யல் ஆற்றிலும், மீதமுள்ள 9 சிலைகள்,  சாடிவயல் சின்னாற்றிலும், விசர்ஜனம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !