உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

சூலுார்:சூலுாரில், இந்து இயக்கங்கள் சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன  ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று 4ம் தேதி நடந்தது.

அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத் சார்பில், சூலுார் வட்டாரத்தில், விநாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. நேற்று 4ம் தேதி காலை முதல் விநாயகர் சிலைகள், அந்தந்த ஊரின், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று 5ம் தேதி சூலுார் சீரணி கலையரங்கில், நடந்த விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ’அயல் நாட்டவரும், இந்து மதத்தின் பெருமைகளை உணர்ந்து ஆச்சரியப்படுகின்றனர். நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து, விழாக்களை கொண்டாடினர். அதேபோல், விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக உள்ளது,” என்றார்.

தொடர்ந்து வி.இ.ப., (தமிழகம்) சார்பில் நடந்த கூட்டத்தில், மாநகர் மாவட்ட  தலைவர் சசிக் குமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்  கோபாலா கிருஷ்ணன், மண்டலத் தலைவர் விஜயகுமார் பேசினர். நகர தலைவர்  கோவிந்தராஜ், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர். ஊர்வலமாக கொண்டு  செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், நொய்யல் ஆற்றில் விசர்ஜனம்  செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !