மேட்டுப்பாளையத்தில் விசர்ஜன ஊர்வலம்
ADDED :2258 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நேற்று 4ம் தேதி விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
காரமடை சாலை அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பிருந்து, சிலைகளின் ஊர்வலம் துவங் கியது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., கார்த்திகேயன், உள்ளிட்டோர் மேட்டுப்பாளையத்தில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.