உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்துார் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்,சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்துமுண்ணனி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட செயலர் யுவராஜா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி லட்சுமணன துவக்கி வைத்தார். நேற்று 4ம் தேதி மாலை 4:00 மணிக்கு ராமகிருஷ்ணா புரத்திலிருந்து 35 சிலைகளுடன் துவங்கிய ஊர்வலம் திருவண்ணாமலை கோயில் குளத்திற்கு வர அங்கு சிலைகள் கரைக்கபட்டது.மாவட்ட செயலர் சுரேஷ்,செயற்குழு உறுப்பினர் சிவா, நகர் தலைவர் வினோத்குமார் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்விருதுநகர்:விருதுநகரில் 36 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு ஸ்டார் லாட்ஜ் பின்புறம் உள்ள கல்கிடங்கில் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., சாத்துார் முக்குராந்தல், அண்ணாநகர், மேலக்காந்திநகர், நள்ளி என 19 இடங்களில் பூஜிக்கப்பட்டவிநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பபட்டு ஏழாயிரம்பண்ணை கீழச்செல்லையாபுரம் கல்குவாரியில் கரைக்கப்பட்டன. இதன் ஊர்வல த்தை எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !