உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

சிறுபாக்கம் : சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா  நடந்தது.கடந்த ஒன்றாம் தேதி, காலை 6:00 மணியளவில், விநாயகர் வழிபாடு,  கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமம் நடந்தது.

மாலை 6:00 மணியளவில் பஞ்ச காவ்யம், வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜையுடன் முதல் கால யாக பூஜை துவங்கியது.நேற்று முன்தினம் (செப்., 2ல்) காலை 5:00 மணியளவில், இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, நாடி சந்தனம், தீபாராதனை நடந்தது.

காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு,10:30 மணியளவில் மூலவர் ராஜகணபதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !