உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம், வெள்ளக்கிணறு குளத்தில் 277 சிலைகள் கரைப்பு

பெரியநாயக்கன்பாளையம், வெள்ளக்கிணறு குளத்தில் 277 சிலைகள் கரைப்பு

பெ.நா.பாளையம்: துடியலுாரில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில்,  பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள், வெள்ளக்கிணறு குளத்தில்  கரைக்கப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரத்தில் இந்து முன்னணி, வி.எச்.பி.,  அகில பாரத இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில்,  பல்வேறு இடங்களில், 277 விநாயகர் சிலைகள் கடந்த, 2ம் தேதி பிரதிஷ்டை  செய்யப்பட்டன.

கடந்த இரண்டு நாட்கள் பூஜைக்கு பின், நேற்று 4ம் தேதி மதியம் முதல்  வெள்ளக்கிணறு குளத்தில் கரைக்கப்பட்டன. துடியலுார் பஸ் ஸ்டாண்டில் இ.மு.,  சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், மாநில பொது செயலாளர் கிேஷார்குமார்  பேசினார். கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் வி.எச்.பி., சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. இதில், வி.எச்.பி., மாவட்ட, மாநில நிர்வாகிகள்  பங்கேற்று பேசினார்.

வெள்ளக்கிணறு குளத்தில் இரவு நேரத்தில் சிலைகளை கரைக்க குளத்தைச்  சுற்றியும், மின் விளக்குகளை போலீசார் அமைத்து இருந்தனர். சிலைகளை  வாங்கி கரைக்க, நீச்சல் வீரர்கள் கரையில் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !