உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி மஹாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

தர்மபுரி மஹாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, கீழ்மாட்டுகாரனூர் செல்லமுத்து மஹாமாரியம்மன்  கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆக., 29ல்,  கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் (செப்., 4ல்) காலை, 7:00 மணிக்கு மங்கள வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, ஹோமம், லட்சுமி நவக்கிரஹ ஹோமம் நடந்தது.

மற்றும் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று 5ம் தேதி  காலை, 5:00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, 16 வகை தீபாராதனை  நடந்தது. 9:30 மணிக்கு மேல், செல்வமுத்து மஹாமாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா நடந்தது. 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம்  நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !