திண்டிவனத்தில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்
ADDED :2334 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஊர்வலம் நடந்தது.திண்டிவனம் பகுதியில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் பர்யூஷன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, கடந்த மாதம் 26ம் தேதியிலிருந்து நோன்பு மேற்கொண்டு வந்தனர்.இதில், உன்னத்தி கோல்ச்சா, யஷ்வந்த் காணுகா, சேத்தல் காணுகா ஆகியோர் தொடர்ந்து நோன்பில் இருந்தனர். இவர்களை போற்றும் வகையில், மூன்று பேரையும், திண்டிவனத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக குதிரை வண்டியில் அமர வைத்து, பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஜெயின் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.பின்னர் ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஜெயின் சமூகத்தினர், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.