உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய காஞ்சிபுரத்தில் பழநியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் பழநியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பழநியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (செப்., 8ல்) நடைபெறுகிறது.

பெரிய காஞ்சிபுரம், நெமந்தகாரத்தெருவில், பழமையான பழநியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சில மாதங்களாக, கிராம மக்கள், திருப்பணி மேற்கொண்டனர்.இப்பணி முடிந்ததையடுத்து, நாளை, கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, நேற்று (செப்., 6ல்) காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன், யாகசாலை பூஜைகள் துவங்கின.

இன்று (செப்., 7ல்) கோபூஜை, தனபூஜை, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. கும்பாபிஷேக தினமான நாளை 8ம் தேதி காலை, 10 மணிக்கு கலச புறப்பாடும், மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மஹா தீபாராதனை, மூலவர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இரவு, 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !