புதுப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2328 days ago
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் சாலை, புதுப்பட்டி மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. லஷ்மி ஹோமம், தனபூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பால் மார்க்கெட் ஹரிஹரன் கோவிலில் இருந்து, திரளான பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். அங்கு, புனிதநீரை ஊற்றி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின், வேதபாராயணம், விநாயகர் வழிபாடு, முதல்கால யாகபூஜை செய்தனர். இன்று, இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி, தீபாராதனை, நாளை காலை, 7:30 மணிக்கு மேல், கும்பாபிஷேகம் நடத்தி, அன்னதானம் வழங்கப்படும்.