மரங்களே! கனி கொடுங்கள்!
ADDED :2230 days ago
இரக்கமனம் கொண்ட பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் போனால் உதவி கிடைக்கும் என நினைத்து ஏராளமானோர் படையெடுக்க ஆரம்பித்தனர். இதை விரும்பாத அவரது குடும்பத்தினர் வந்தவர்களுக்கு ஏதும் தராமல் அனுப்பினர். வீட்டுத் தலைவி ஜெபித்தபோது, ஆண்டவர் பேசுவது போல் இருந்தது. “பட்டுப் போன மரத்தைத் தேடி பறவைகள் செல்வதில்லை. காய்த்த மரங்களைத்தானே அவை நாடும். உன்னைக் கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ அதிக கனி கொடுப்பாயானால், இன்னும் உன்னை ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்,”என்றது அக்குரல். அப்பெண்மணி சிந்தித்தாள். தவறுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவள் குடும்பத்தினர் மீண்டும் தானம் செய்யத் துவங்கினர். நீங்கள் எப்போதும் கனி தரும் செடியாய் இருங்கள். தானம் கேட்க வருபவர்களிடம் எரிச்சல் படாதீர்கள்.