உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவோண பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

திருவோண பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

 சபரிமலை : திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது;

கேரள மாநிலம் பந்தனம் திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில், நாளை மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார். பின், இரவு, 10:00 மணிக்கு  நடை அடைக்கப்படும். 10ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். அடுத்து,11ம் தேதி திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி  தீபாராதனை நடைபெறும். அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும். 13ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலைக்கு தனிச்சட்டம்:
சபரிமலை பிரச்னை குறித்து, பந்தளம் மன்னர், ரேவதிநாள் ராமவர்ம ராஜா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது, சபரிமலை கோவிலை நிர்வகிக்க, சிறப்பு தனி சட்ட முன்வடிவு கொண்டு  வரப்படும் என, கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய  அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !