ஆதரவுக்கரம் நீட்டுங்கள்
ADDED :2230 days ago
ஓரிடத்தில் அன்னதானம் அளிக்கப்பட்டால், இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இந்த காரணத்துக்காக தரப்படும் என்ற அறிவிப்பு இருந்தால் போதும். யார் கொடுக்கிறார்கள் என்பது தேவையற்றது. பைபிளில், “தர்மம் செய்யும் போது, அது குறித்த விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். வலது கை செய்வதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது” என்று வசனம் ஒன்று இருக்கிறது. தர்மம் செய்பவர் ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்படுவார். சூரியன் ஒளி தருகிறது. மரங்கள் கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உணவோடு கலந்து ருசி தருகிறது உப்பு. மெழுகுவர்த்தி ஒளி தருகிறது. இவை தியாகம் செய்வதோடு தங்களின் சேவையை வெளிக்காட்டுவதில்லை.ஆதரவுக்கரம் நீட்டுங்கள்! இயன்ற உதவியை பிறருக்குச் செய்யுங்கள் என்பதை புரிந்து நடக்க வேண்டும்.