உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

காரைக்காலில் வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் கோவில் சார்பில் திருமலா திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கோவில் சார்பில் ஸ்ரீபகவான் பக்த ஜன சபா மற்றும் நாட்டியாலயா பாரத நாட்டிய அகாடமி இணைந்து நேற்று காரைக்கால் அம்மையார் திருக்குளம் சந்திர புஷ்கரணியில் திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.முன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுப்ரபாத சேவை, திருமஞ்சனம், தோமாலை சேவை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர வேத பாராயணம் மற்றும் நாட்டியாலயா பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !