திந்திரிணீஸ்வரர் கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :5047 days ago
திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி காலை 8.10 மணிக்கு விநாயகர், முருகன், திருமூலநாதர், ஆத்மலிங்க ஆஞ்சநேயர், சனிபகவான் ஆகிய பரிவார மூர்த்திகளின் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11.25 மணிக்கு ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.