உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர விழா

சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர விழா

செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர விழா நடக்கிறது. விழாவினை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு கொடி அழைப்பு நடந்து பின்னர் அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாகாப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு செய்துங்கநல்லூர் நம்பி சாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அபிஷேகமும், பகல் ஒரு மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு சாம பூஜை நடந்து படப்பு வைப்பு தீபாராதனை நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு கோயில் வளாகத்திலுள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அமைக்க இப்போதே தயாராகி வருகின்றனர். இக்கோயிலுக்கு நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களைத் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்.,தலைவி சுந்தரிகுமாரி தலைமையில் பஞ்.,நிர்வாகம் பல்வேறு அடிப்படை தேவைகளை செய்து வருகிறது. போக்குவரத்து துறையினர் சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளனர். செய்துங்கநல்லூர் போலீசார் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !