விபத்தில்லா பயணம் செய்ய வழிபாடு!
ADDED :2227 days ago
வாகனங்களில் பயணம் செல்வது பகீரத பிரயத்தனமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்பவும், பயணம் இனிதாக அமையவும் எளிய பரிகாரம் ஒன்றுண்டு.
கந்தரனுபூதியில் இருக்கும் நிறைவுப்பாடலான, ‘‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்ற பாடலைப் பாராயணம் செய்து விட்டு வீட்டிலிருந்து கிளம்புங்கள். இதனால், செல்லும் இடமெல்லாம் முருகப்பெருமான் கூடவே வந்து காத்தருள்வார். ‘ஹரிஓம்’ என்ற மந்திரத்தை ஜெபித்துவிட்டும் கிளம்பலாம். இம்மந்திர சக்தி கவசம் போல உங்களைப் பாதுகாக்கும்.