உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணத்திற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணத்திற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசின் நிதி யுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் 50 கன்னியாஸ்திரிகள் உட்பட 600 கிறிஸ் தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அக்டோபர் முதல் 2020 மார்ச் வரை பயணம் மேற்கொள்ளப்படும். பயண காலம் 10 நாட்கள் வரை இருக்கும். www.bcmbcmw.tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் இணைத்து அஞ்சல் உறையின் மேல் ’கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி விண்ணப்பம் 2019-20’ என எழுதி, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், சேப் பாக்கம், சென்னை 600 005 முகவரிக்கு செப்.30 க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்கு 044-28520033 ல் பேசலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !